search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திப்பு ஜெயந்தி"

    திப்பு ஜெயந்தி கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் பாஜக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது. #TipuJayanti #KarnatakaBJP #BJPProtest
    மடிகேரி:

    கர்நாடகத்தில் திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா திப்பு ஜெயந்தியாக அரசு சார்பில் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.  

    தனது ஆட்சிக்காலத்தில் இந்துக்களை கொடுமைப்படுத்தி, கொடூரமாக கொன்றுகுவித்த திப்பு சுல்தானின் பிறந்தநாள் விழாவை  சிறுபான்மையின மக்களின் ஓட்டுகளை கவரும் நோக்கத்தில் மாநில அரசு நடத்துவதாக எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. திப்பு ஜெயந்தி விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மாநிலம் முழுவதும் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

    இந்த எதிர்ப்பையும் மீறி இன்று திப்பு ஜெயந்தி விழா பலத்த பாதுகாப்புடன் கொண்டாடப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடகு மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



    இந்நிலையில், திப்பு ஜெயந்தி கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று பாஜக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. மடிகேரியில் உள்ள ஸ்ரீ ஓம்காரேஷ்வரா ஆலயத்தில் சாமி தரிசனம் செய்த போராட்டக்குழுவினர், அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டுச் சென்றனர். திப்பு ஜெயந்திக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியபடி சென்ற அவர்களை போலீசார் கைது செய்தனர். #TipuJayanti #KarnatakaBJP #BJPProtest
    ஜனார்த்தனரெட்டிக்கும், பா.ஜனதாவுக்கும் தொடர்பு இல்லை என்று கர்நாடக பா.ஜனதா மூத்த தலைவர் ஈசுவரப்பா கூறியுள்ளார். #Eshwarappa #TipuJayanti
    பெங்களூரு :

    கர்நாடக பா.ஜனதா மூத்த தலைவர் ஈசுவரப்பா பாகல்கோட்டையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    எங்கள் கட்சியினரின் யாருடைய உடலிலும் திப்பு சுல்தானின் ரத்தம் ஓடவில்லை. பாரத மாதா, சுதந்திர போராட்டக்காரர்களின் ரத்தம் தான் ஓடுகிறது. இந்த திப்பு ஜெயந்தி விழாவை மாநில அரசு எதற்காக இவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது என்பது தெரியவில்லை. திப்பு ஜெயந்தி விழாவை கொண்டாட தொடங்கியதில் இருந்து இந்துமத அமைப்புகளின் தொண்டர்கள் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். திப்பு ஜெயந்தி விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தின்போது, குடகில் குட்டப்பா என்பவர் மரணம் அடைந்தார்.

    அப்போது அவரது வீட்டுக்கு குமாரசாமி நேரில் சென்று ஆறுதல் கூறினார். தான் முதல்-மந்திரியானால் திப்பு ஜெயந்தி விழாவை நடத்த அனுமதிக்க மாட்டேன் என்று கூறினார்.



    ஆனால் இப்போது குமாரசாமி திடீரென முதல்-மந்திரி ஆகி இருக்கிறார். கர்நாடகத்தில் இந்து-முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக இருந்தனர். ஆனால் இப்போது இந்த அரசு திப்பு ஜெயந்தி விழாவை நடத்தி, இந்து, முஸ்லிம் மக்களிடையே அமைதியை குலைக்கிறது. மக்கள் இறந்தால், காங்கிரசாருக்கு மகிழ்ச்சியாக இருக்குமோ என்னவோ தெரியவில்லை.

    கர்நாடக பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாளை(அதாவது இன்று) பெங்களூருவில் நடக்கிறது. கூட்டத்தில் திப்பு ஜெயந்தி விழாவுக்கு எதிராக போராடுவது குறித்து முடிவு எடுக்கப்படும். அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் நடத்துவோம். திப்பு ஜெயந்தி விழா விஷயத்தில் குமாரசாமிக்கு எந்த நிலைப்பாடும் இல்லை. ஜனார்த்தனரெட்டிக்கும், பா.ஜனதாவுக்கும் தொடர்பு இல்லை. அவரை பற்றி என்னிடம் கேள்வி கேட்க வேண்டாம்.

    இவ்வாறு ஈசுவரப்பா கூறினார்.  #Eshwarappa #TipuJayanti
    கர்நாடக மாநிலத்தில் திப்பு சுல்தான் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட எதிர்ப்பு பெருகிவரும் நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க குடகு மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. #144inKodagu #TipuJayanti
    பெங்களூரு:

    கர்நாடகம் உள்ளிட்ட இந்தியாவின் தெற்கு பகுதிகளை ஆண்ட திப்பு சுல்தானின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    தனது ஆட்சிக்காலத்தில் இந்துக்களை கொடுமைப்படுத்தி, கொடூரமாக கொன்றுகுவித்த திப்பு சுல்தானின் பிறந்தநாள் விழாவை  சிறுபான்மையின மக்களின் ஓட்டுகளை கவரும் நோக்கத்தில் மாநில அரசு நடத்துவதாக சமீபகாலமாக எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.

    திப்பு ஜெயந்தி விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று பா.ஜ.க. தொண்டர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூரில் நடந்த இந்த போராட்டத்தில் பங்கேற்ற தொண்டர்கள், திப்பு ஜெயந்திக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.

    நாளை நடைபெறும் திப்பு ஜெயந்தி விழாவில் பங்கேற்பதாக இருந்த முதல் மந்திரி குமாரசாமி அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்க  குடகு மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. #144inKodagu  #TipuJayanti 
    திப்பு ஜெயந்தி கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #TipuJayanti #KarnatakaBJP #BJPProtest
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா திப்பு ஜெயந்தியாக நாளை கொண்டாடப்பட உள்ளது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முஸ்லிம்களை திருப்திபடுத்துவதற்காக காங்கிரஸ் கட்சி திப்பு ஜெயந்தியை கொண்டாடுவதாக குற்றம்சாட்டுகிறது.


    இந்நிலையில் திப்பு ஜெயந்தி விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று பாஜக தொண்டர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூரில் நடந்த இந்த போராட்டத்தில் பங்கேற்ற தொண்டர்கள், திப்பு ஜெயந்திக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கம் எழுப்பினர். #TipuJayanti #KarnatakaBJP #BJPProtest
    திப்பு ஜெயந்தி விழாவை ரத்து செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார். #TipuJayanthi #Yeddyurappa
    பெங்களூரு :

    கர்நாடக அரசு சார்பில் வருகிற 10-ந் தேதி திப்பு ஜெயந்தி விழா நடக்கிறது. இந்த விழாவை ரத்து செய்ய வேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திப்பு சுல்தான் பல்வேறு விஷயங்களில் பிரச்சினைக்குரிய நபராக இருக்கிறார். மேலும் அவர் மதவெறி கொண்டவர். வரலாற்று ஆவணங்கள்படி, கொடவா சமூகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தவர். கொடவா சமூக மக்கள் சமீபத்தில் டெல்லியில் இங்கிலாந்து தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மலைவாழ் மக்களுக்கு எதிராக போரிட்டபோது, திப்பு சுல்தானுக்கு இங்கிலாந்து ஆதரவு வழங்கியது. இதற்காக மன்னிப்பு கேட்குமாறு கொடவா மக்கள் வலியுறுத்தினர்.



    திப்பு ஜெயந்தி விழாவுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறி இருக்கிறார். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். திப்பு ஜெயந்தி விழாவை நடத்துவது, மக்களின் உணர்வுகளுக்கு எதிரானது. அதனால் இந்த விழாவை நாங்கள் எதிர்க்கிறோம்.

    சிறுபான்மையின மக்களின் ஓட்டுகளை கவர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த விழாவை மாநில அரசு நடத்துகிறது. இது வாக்கு வங்கி அரசியல். முஸ்லிம் சமுதாயத்தில் சாதனை படைத்தவர்களை கவுரவிக்க வேண்டும் என்று விரும்பினால், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், அப்துல் ஹமித் ஆகியோர் இருக்கிறார்கள். அதனால் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து திப்பு ஜெயந்தி விழாவை மாநில அரசு ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TipuJayanthi #Yeddyurappa 
    கர்நாடக அரசு சார்பில் திப்பு ஜெயந்தி கொண்டாடினால் பா.ஜனதா சார்பில் 9-ந்தேதி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. #BJP
    மைசூரு :

    ‘மைசூரு புலி‘ என அழைக்கப்படும் திப்பு சுல்தான் ஜெயந்தி விழா கர்நாடகத்தில் கடந்த சில ஆண்டுகளாக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு பிரதான எதிர்க்கட்சியான பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இந்த நிலையில் வருகிற 10-ந்தேதி திப்பு ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை கர்நாடக அரசு சார்பில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதற்கு பா.ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மைசூருவுக்கு வந்த முன்னாள் துணை முதல்-மந்திரியும், பா.ஜனதா எம்.எல்.ஏ.வுமான ஆர்.அசோக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



    கர்நாடகத்தில் அரசு சார்பில் திப்பு ஜெயந்தி விழா கொண்டாட ஏற்பாடு நடந்து வருகிறது. கடந்த காலங்களில் திப்பு ஜெயந்தி விழாவில் பங்கேற்க கேரள மாநிலத்தில் இருந்து முஸ்லிம் அமைப்புகள் இங்கே வந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடந்தால், மாநில அரசு பொறுப்பு ஏற்க வேண்டும்.

    கர்நாடக அரசு சார்பில் 10-ந்தேதி திப்பு ஜெயந்தி விழாவை கொண்டாடினால் பா.ஜனதா சார்பில் 9-ந்தேதி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கிறேன். கூட்டணி ஆட்சி அமைந்து 5 மாதங்கள் ஆகிறது. ஆனால் இன்னும் இந்த அரசு செயல்படத் தொடங்கவில்லை. முதல்-மந்திரி குமாரசாமி தான் செல்லும் இடங்களில் மக்கள் மத்தியில் கண்ணீர் விட்டு அழுகிறார். விவசாயிகளின் கடனை இதுவரை தள்ளுபடி செய்யவில்லை. ஆனால் தனது இ‌ஷ்டத்துக்கு அவர் ஆட்சி நடத்தி வருகிறார். அரசின் கஜானா காலியாகிவிட்டது. இதனால் ஆட்சி நடத்த அவர் பரிதவித்து வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP
    ×